தீண்டத் தீண்ட நதியி தவறிய துளி...
சாட்டையை தானே சொடுக்கியபடி
ஓடிக்கொண்டிருக்கிறது
எண்களாலான தொலைவுகளைக் கடந்து
ஒரு குதிரை
அதன்
குறிப்பிட்டத் தொலைவை
மீண்டும் மீண்டும் அடைந்துவிடுகிறபோதும்
தொலைவுகள் மிடருவதான
அலாதி பிரியத்தில்
தன் போக்கில் இருக்கிறது குதிரை
அதன்
அடுத்தடுத்த முறைகளுக்குள்
கூட்டிலிருந்த குஞ்சுகள்
காணாமல் போகின்றன
செடிகள் பூத்துவிடுகின்றன
ஐம்பது ரூபாயோடு
காரிலிருந்து நீளும் கையை
அடைவதற்குள்
பச்சைவிளக்கு எரிந்துவிடுகிறது
சிறுமியொருத்தி
பூப்பெய்துகிறாள்
வெகுநேரமாய்
பார்த்துக்கொண்டிருந்த ஒருவன்
சிலையின் மார்புகளில் முத்தமிடுகிறான்
எனில்
குறிப்பிட்ட தொலைவை
மீண்டும் மீண்டும் அடைதலில்
சலிப்பதற்க்கு என்னயிருக்கிறது
குதிரைக்கு.
-இயற்கைசிவம்
வாழ்வின் தூரத்தைக் கடப்பது சுவாரஸ்யம்தான் என்கிறீர்கள் போல !
ReplyDelete