சருகுகள்
குளம்படிகள்
எச்சங்கள்...
ஒவ்வொரு நாளும்
விதவிதமாய் ஓவியங்கள் தீட்டப்படும் அவளாடையில்
வேலமரத்தின் குறு மலர்கள் பூத்திருக்கின்றன இன்று
(அதற்குள்ளாக மலர்க்காலம் வந்துவிட்டிருக்கிறது)
அவ்வளவு பிரியத்தோடு தீர்க்கமாய்
அணிந்திருக்கிறாள்
அந்தியோடு நின்றுவிட்ட என் பொழுதுகளின்
மிச்ச நிமிடங்களின் மேட்டின்மேல்
கொண்டுவந்திருந்த மலர்களை சார்த்திவிட்டு
அவள் பிரியத்தின் லட்சம் பற்களால் சிரிக்கும்
வேலமரத்தை முத்தமிடுகிறேன்...
மரத்தின் உச்சியிலிருந்து சிறகடித்த பறவை
மறைவதற்கு முன் புள்ளியானபோது
என் முத்தத்தை ஒத்திருந்தது.
-இயற்கைசிவம்
வசந்தகாலக் கவிதை.பூவாசம் !
ReplyDeleteகவிதையின் தலைப்பே ஒரு குறுங்கவிதையாய்ப் பரிணமித்து கவிதைச்சோலைக்குக் கைப்பிடித்து அழைத்துச் சென்று கிறங்கச் செய்கிறது. பாராட்டுகள்.
ReplyDeleteஎன்ன ஒரு அழகிய இயற்கை! என்ன ஒரு அழகிய கவிதை! பாராட்டுகள்!
ReplyDelete