சூரியனின் இரவு
விரவியிருக்கும் வனாந்திரத்தில்
அலைந்துக்கொண்டிருக்கின்றன
சுவடுகளை தொலைத்த பாதங்கள்...
நொறுங்கும் சருகுகள் நிழலாகின்றன,
கூடவே மிருதுவான நிழலற்றக் கணங்களில்
அமானுஷ்யங்களும்...
மிருகமொன்று நக்கியதில் எஞ்சியிருக்கும்
சலனங்களோடு வியாபித்திருக்கிறது
புதர் விழுங்கிய கரைகளோடான
அந்த நீர்த்தேக்கம்.
-இயற்கைசிவம்
//சுவடுகளை தொலைத்த பாதங்கள்...
ReplyDeleteநொறுங்கும் சருகுகள் நிழலாகிறது//
அமானுஷ்யம் மீறி சலனம் உணர்த்தும் வரிகள்
comment verification எடுத்து விடுங்க.
ReplyDeleteமிருகமொன்று நக்கிய சலனங்கள் எஞ்சிய கரைகளோடு நீர்த்தேக்கம் ... நுட்பமான கற்பனை அழகான வரிகளில் வனாந்தரம் கூட எழிலாகிவிட்டது .. புகைப்படம் .. template தேர்வு எல்லாம் அருமையாக இருக்கிறது ... வாழ்த்துகள் சிவம் ... கட்டுரைகளையும் வெளியிடுங்கள் ...
ReplyDelete