மீதமிருக்கும் இருளை
எங்கோ ஒலித்துவிடுகின்றன.
ஒருவேளை
சூரியனுக்கு பின்புறத்திலும் இருக்கலாம் அது,
அல்லது
அடர் கானகத்தில் அடையாளம் தெரியாதபடி
துண்டங்களாகக் கிழித்துப்போட்டிருக்கவும் கூடும் ,
ஜன்னலுக்கு வெளியே
தும்பிகள், வண்ணத்துப் பூச்சிகளென
பலவும் அதனதன் இரவுகளை தூக்கிச்செல்கின்றன
அந்திமத்திற்கு.
இப்போது போர்வைக்குள் இருப்பது
நேற்று வீட்டிற்கு திரும்பும்போது ஒட்டிவந்தது.
ஆனால்
எனக்கு என் புது இரவு,
இன்றைக்கானது
வேண்டுமாய்த் தோன்றுகிறது.
ஆமாம்.
இதோ வெளியேறுகிறேன் சேகரித்துவர.
-இயற்கைசிவம்.
ஜன்னலுக்கு வெளியே
ReplyDeleteதும்பிகள், வண்ணத்துப் பூச்சிகளென
பலவும் அதனதன் இரவுகளை தூக்கிச்செல்கின்றன
அந்திமத்திற்கு.
முழுக்கவிதையும் இருளினுள் ஒளிந்திருக்கும் அவரவர் ஒளியை பூடகமாய்க் காட்டிக் கொண்டே இருக்கிறது வாசித்து முடிகிறவரை.
என் ஒவ்வொரு படைப்பிற்கும்
ReplyDeleteதவறாமல் வந்து சேரும் தங்களின்
கருத்துக்களுக்கு நான் என்ன செய்துவிட முடியும்
இன்னும் இன்னும் கருத்துக்களை
தங்களிடத்தில் பெறுவதைத் தவிர...
-இயற்கைசிவம்