இமைகளற்ற கண்களை மட்டும் கொண்டு
என்ன செய்துவிட முடியும்...
நிர்வாணங்கள்
உதாசினப்படுத்தும்போது
முகத்தில் அறையும்போது
தேகத்தில் வழியும்போது
இருளை அணிந்து
தாழ்திறந்து
பேரிருளுக்குள் பிரவேசிக்கும்போது...
திருகப்பட்ட நா நுனியில் சொட்டுகிறது
அபிலாசைப் பிரவாகத்தின்
சில துளிகள்
குளியலறைக்கு.
-இயற்கைசிவம்
அதே தவிப்பும் துடிப்பும் வார்த்தைகள் மூலம் கடத்தப்படும் சாதனமாய் இக்கவிதை.
ReplyDeleteSuper Mappilai
ReplyDelete