நம்ம அடுப்பங்கரையிளிருந்து
வாச தூரம் இருக்கும்'கவலபள்ளம் '.,
இருட்டு மேல வந்து
பாட்டுக் கட்டிகிட்டே எரைச்சன்னா
தண்ணில பாதியும்
பாட்டுல பாதியுமா
நம்ம கழனி பயிர்களோட
பக்கத்து கழனி பயிர்களும்
பதமா வளரும்...
ஒரு ஒரு நடைக்கும்
ஓட்ட
தொண்டான்லயிருந்தும் சால்லயிருந்தும்
ஒழுகும் தண்ணியமழைனு நெனச்சு
துள்ளிக் குதிக்குங்க
தண்ணிக் குஞ்சுங்க...
பழகாத மாடு கூட
நான் இட்டுக்கட்டும் பாட்டுக்கு
கழுத்துச் சலங்கைல
மெட்டுக் கட்ட ஆரம்பிச்சுடும்...
சாலு போய்
இஞ்சினு,
மோட்டருனு வரும்போதே
மோட்டாரு போனா
மோசம் போவோமுன்னு
பாழும் புத்தி சூதானிக்கலையே...
அந்த கான்கிரீட் காட்டின்
ஒரு மரத்தின்
மூன்றாம் கிளையில்
வழக்கம்போல
தூங்கிவிட்டிருந்தாள் நவீனா குட்டி,
யாரும் கவனிக்கும் முன்
கண்களைத் துடைத்துக்கொண்டார்அப்பாசாமி.
-இயற்கைசிவம்.
சாலு போய்
ReplyDeleteஇஞ்சினு,
மோட்டருனு வரும்போதே
பாழும் புத்தி சூதானிக்கலையே...
இயற்கைசிவத்தின் கவிதைகள் தரும் அனுபவமே அலாதி.