
பயணங்களின் அனுபவமற்ற
என் தெருவில்
வெயிலின் சுவடுகளாய்
திரிகின்றன சருகுகள்
நடுநிசியில் ஏறி
மேயும் கண்களுக்கு
காணக் கிடைக்கின்றன
நகருக்கு வெளியே இருக்கும்
இன்னபிறத் தெருக்களின் முனகல்கள்
பறவைகளின் நிழல்கள்
மேகங்களின் நிழல்கள்
மற்றும்
வெயிலின் சுவடுகளின் நிழல்கள்
அனைத்திலும்
பயணங்கள் குறித்துக் கிரங்கித் தோயும்
பயணங்களின் அனுபவமற்ற
என் தெரு
நடுநிசியில் ஏறி மேயும்
கண்களுக்குக் காத்திருக்க
பழகியிருந்தது
இப்போது.
-இயற்கைசிவம்
No comments:
Post a Comment