தேக்கியிருக்கும்
நூற்றுச்சிதறல்களுடன்
பதற்றமற்ற மௌனத்தில்
விழித்திருக்கிறது வெடி
பேரிரைச்சலினுள்
தவறி விழுந்துவிடுகிறது
ஒரு நிசப்தம்
அலகிலிருந்து
தவறி விழுகிறது
ஒரு மீன்
இப்போதைய
ஆகச்சிறந்த பிராத்தனைகள் எல்லாம்
எந்தத் தூறலும்
வலுத்துவிடக்கூடாது என்பதுதான்
-இயற்கைசிவம்
மறைபொருள் புரியாநிலையிலும் மனக்குளத்தில் சஞ்சலம் ஏற்படுத்திச் செல்கிறது அலகிலிருந்து தவறி விழுந்த மீனாய் கவிதை வரிகள்.
ReplyDeleteபடமும் கவிதையும் இனம் புரியாத நடுக்கம் தருகின்றன
ReplyDeleteகவிதை நல்லாயிருக்கு. (''நூற்றுச் சிதறல்கள்... சிதறல் வல்லின ற அல்லவா? )
ReplyDeleteஜனா. நீங்கள் சொல்வது போல வல்லின 'ற' தான் வரவேண்டும்
ReplyDeleteதிருத்தியிருக்கிறேன். இது போன்ற கருத்துக்கள்
வலைப்பூவை மேலும் மெருகேற்றும். தங்களின்
அன்பிற்கும் வாசிப்பிற்கும் நன்றிகள்.
ரிஷபன் சார், வழக்கமான உங்கள் ரசித்தல் பற்றிய எண்ணம்
ReplyDeleteஎழுதும் போதே விரியத்துவங்குகிறது
காட்சிகளாய்...
கீதா. தங்களின் தொடர்ச்சியான வாசிப்பில் எனது படைப்புலகம்
ReplyDeleteஇன்னும் பெரிதாய் விரிகிறது. மேலும் இந்த கவிதையை வெளியிடுகையில்
கடைசி நொடியில் வெடி என்பதை கயிறு என குழப்பத்தில்
மாற்றிவிட்டேன் , பின்னர் தவறு புரிந்து திருத்தியிருக்கிறேன் வாய்ப்பிருந்தால் மீண்டும்
வாசியுங்கள். தங்களின் அன்பிற்கும் நேர்த்தியான வாசிப்பிற்கும் என் நன்றிகள்.