நான் பின்னோக்கிச் செல்வதாக
சொல்லிப் போகிறது
ஒரு பறவை
உண்மையில் நான்
நடந்துக்கொண்டிருந்தேன்
கேட்பதாகயில்லை
எனினும்
அடுத்தடுத்துக் கடக்கும்
எல்லா பறவைகளும்
நான்
பின்னோக்கிச் செல்வதாகவே
சொல்லிப் போகின்றன
உண்மையில் நான்
நடந்துக்கொண்டிருந்தேன்
இருத்தலில்
இருக்கும்
யாவும்
எதிர் திசையில் மட்டுமே
பயணிக்கக் கூடியவை
உண்மையில்
திரும்பி வந்தாகவேண்டிய
இப்பாதையில்
நான்
முன்னதாக
நடந்துக்கொண்டிருந்தேன்.
-இயற்கைசிவம்.
கவிதைக்கான இடம் எப்போதோ நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது.. கவிஞனின் இடமும்.
ReplyDeleteவணக்கம் இயற்கைக்கு!
ReplyDeleteஎங்கள் பயணங்கள் சரியாக இருக்கும்போது முரண்படுபவர்களுக்கு அது எதிர்த்திசைதானே !