ம் என்ற சொல்லுக்கு இங்கே தீண்டுங்கள்
புள்ளிகளில் சொற்கள் கொண்டவனுக்கு
தீண்டும் யாவற்றிலும்
பேசக் கிடைக்கின்றன புள்ளிகள்
சொற்களற்ற இடமே இல்லையா
என்றவனுக்கு
பதிலில்லாமல் அவனது
கைகளைப் பற்றிக்கொண்டேன்
இன்னும் இன்னும்
கணிசமாக அவனது கைகளை
பற்ற நினைக்கையில்
தவிர்க்கவியலாமல் போனது
சில புள்ளிகள்
க.ண்.ணீ.ர்
என சொல்லாக்கி திகைத்தவன்
நான்
நூற்றின் முறைகள் முயன்றிருந்த
இருளை
புரிந்துக் கொண்டதாக
கைகளை விடுவித்துக்கொண்டு
செல்கிறான்
சென்றுவிட்டான்
அப்போதிருந்து
கூண்டிலிருந்து வெளிவந்த
கோழியின் சிறகடிப்பில்
நதியின் கறை விளிம்பில் கேட்கும்
சலசலப்பில்
இரவின் நிசப்தத்தில் சொட்டும்
சரியாக மூடப்படாத
குழாயில் ...
என
அன்றாடங்களில்
நீக்கமற நிறையும்
யாவற்றிலும்
கேட்கும் குத்தச்சு சப்த்தங்களில்
பழகத்துவங்கியிருந்தேன்
கடவுளரின்
லிபியை.
-இயற்கைசிவம்
புள்ளிகளில் சொற்கள் கொண்டவனுக்கு
தீண்டும் யாவற்றிலும்
பேசக் கிடைக்கின்றன புள்ளிகள்
சொற்களற்ற இடமே இல்லையா
என்றவனுக்கு
பதிலில்லாமல் அவனது
கைகளைப் பற்றிக்கொண்டேன்
இன்னும் இன்னும்
கணிசமாக அவனது கைகளை
பற்ற நினைக்கையில்
தவிர்க்கவியலாமல் போனது
சில புள்ளிகள்
க.ண்.ணீ.ர்
என சொல்லாக்கி திகைத்தவன்
நான்
நூற்றின் முறைகள் முயன்றிருந்த
இருளை
புரிந்துக் கொண்டதாக
கைகளை விடுவித்துக்கொண்டு
செல்கிறான்
சென்றுவிட்டான்
அப்போதிருந்து
கூண்டிலிருந்து வெளிவந்த
கோழியின் சிறகடிப்பில்
நதியின் கறை விளிம்பில் கேட்கும்
சலசலப்பில்
இரவின் நிசப்தத்தில் சொட்டும்
சரியாக மூடப்படாத
குழாயில் ...
என
அன்றாடங்களில்
நீக்கமற நிறையும்
யாவற்றிலும்
கேட்கும் குத்தச்சு சப்த்தங்களில்
பழகத்துவங்கியிருந்தேன்
கடவுளரின்
லிபியை.
-இயற்கைசிவம்
மனம் கனக்கும் ஒரு கவிதை !
ReplyDeleteபுள்ளிகளால் உலகறிந்தவனின் உலகை நாமறிய இயலாதது பெரும் துர்பாக்கியமே. கவிதை மிகவும் நன்று.
ReplyDelete