எந்த நோக்கமுமில்லை
இத்தனைக்கும்
தனிமையின் பெருந்திரளின்
சாயலுமில்லை அதில்
வெக்கையில் நொதித்து
துர்மனம் பரப்பிக்கொண்டிருக்கும்
காயங்களின்
பிசுபிசுப்புமில்லை
மேலும்
மிக அருகிருந்து
என்னைப் பருகி பருகி
உப்பியதாலேயே
நானில்லை அதில்
தெருப்பிள்ளையிடம் வாங்கி ஊதுகையில்
அவளின் முகத்தருகே சென்று
உடைந்திருந்தது குமிழ் ஒன்று
அவ்வளவுதான்
ஆடையின் நீல நிறப் பூக்கள்
வீதி நெடுக சிந்தும்படிக்கு
சிரித்துச் செல்கிறாள்.
-இயற்கைசிவம்
தெருப்பிள்ளையிடம் வாங்கி ஊதுகையில்
ReplyDeleteஅவளின் முகத்தருகே சென்று
உடைந்திருந்தது குமிழ் ஒன்று
பின்னாலேயே வரவழைத்து விட்டது..
நீல நிறப்பூக்கள் காற்றில் அலைந்து கொண்டே இருக்கின்றன .அற்புதமான எழுத்து.வாழ்த்துக்கள்
ReplyDeleteanbu nanrigal sakthi
Delete