காதலின் சாரல் நனைத்துவிடும் இங்கே தொடாதீர்கள்

நேர் புள்ளி
சந்துப் புள்ளி
கோலங்களை விட்டுவிட்டு
திட்டுத் திட்டாய்
வண்ணம் பூசிக்கொண்டு நின்ற
நட்சத்திராவின் முகத்தில்
பொங்கிக்கொண்டிருந்தது பால்
தட்டியும்
ஊதியும்
துடைத்தும்
இறக்கி வைக்கிறாள்
அம்மா.
-இயற்கைசிவம்
தட்டியும்
ReplyDeleteஊதியும்
துடைத்தும்...
அழகாயிருக்கிறது நட்சத்திராவின் கோலமும் அம்மாவின் கரிசனமும் உங்க கவிதையும்.
வண்ணக் கோலமும்
ReplyDeleteஅழகு கவிதைக் கோலமும்
மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்
எந்தக் கோலம் அழகு?
ReplyDeleteமூவரின் அன்பான கருத்துக்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்...
ReplyDeleteஅழகான கவிதை.. பாராட்டுக்கள்..
ReplyDelete