Monday 30 January 2012

போன்சாய்கள்


touch ம் என்ற சொல்லில் to feel love of love 

1. குச்சிகள்
வைக்கோல் இழைகள் சகிதம் 
கடந்துக்கொண்டிருக்கும் பறவைகளை
அடர் நிசப்தத்திலிருந்து
வெறிக்கின்றன போன்சாய்கள் 

2. சாலையின் எதிர்புறம் தன்பக்கமாக
கை நீட்டி அடம்பிடிக்கும் 
சிறுவனைக் கண்டுகொண்ட ஒன்று
தன் குறுங்கிளைகளை அசைத்து சிலிர்க்கிறது 

3. காவல் வாகனத்திலிருந்து இறங்கிய 
வன்மையான ஒருவர் 
மரணத்தின் கால்களால் எட்டியுதைக்கையில் 
ஒன்றன் நுனி முறிந்து ஈரம் கசிகையில்
அதிர்ந்துதான் போய்விட்டன எல்லாமும்

4. ஒன்றன் மீது ஒன்றாக வீசப்பட்ட 
போன்சாய்களுக்கு
குறு வாகனத்தின் சன்னலின் வழி 
உலகம் எதிர் திசையில் போய்க்கொண்டிருந்தது

5. ஒரு கையில்
இறகொன்றை வைத்துக்கொண்டிருந்த சிறுமி
கண்களைத் துடைத்தபடி
வாகனத்திலிருந்து இறங்கி வருகிறாள்
விற்பனை நிலையத்தை நோக்கி.  


-இயற்கைசிவம்

3 comments:

  1. இயற்கைகளை அழித்துவிட்டு செயற்கை போன்சாய்களோடு பேசிக்கொண்டிருக்கிறோம்.என்னைப்போல பெரியவர்கள் உயரமானவர்கள் இருந்தார்கள் என்று போன்சாய்களும் சொல்லுமோ !

    ReplyDelete
  2. வாங்க. வெகு நாளின் பின்னான தங்களின் வருகைக்கும் வாசிப்பிற்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  3. நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    ReplyDelete