மீண்டும் மீண்டும் குலுக்குகிறபோதும்
சன்னமாகவே இருக்கும் சில்லறைத் தட்டை
உதாசினிக்கும் பொருட்டு
எதேச்சையாய் நடந்துவரும் சிறுமியை நோக்கி நீட்டுகிறான்
திகைத்தவள் பின் சமாளித்து
புன்னகையித்து ஒதுங்கிச் செல்கிறாள்
இப்போது
மருண்ட விழிகள் ஒருமுறை
சிறு புன்னகை ஒருமுறை
பாவாடையில் படபடத்தப் பூக்கள் ஒருமுறை
தூரச் சென்று வீசிய பார்வை ஒருமுறை என
சிலிர்த்துக்கொண்டிருந்தது
அடுத்தடுத்த முறைகளில் தட்டு.
-இயற்கைசிவம்
ஒரு சிறு சலனத்துக்குள் பெரும் அதிர்வுகளைக் கிளப்பிச் செல்லும் கவிதை. சில்லறைகளற்றிருந்தபோதும் சிலிர்ப்புகளால் நிறைந்த தட்டில் நானும் இடுகிறேன் சின்னதாய் சில சந்தோஷங்கள். பாராட்டுகள்.
ReplyDeleteமருண்ட விழிகள் ஒருமுறை
ReplyDeleteசிறு புன்னகை ஒருமுறை
பாவாடையில் படபடத்தப் பூக்கள் ஒருமுறை
தூரச் சென்று வீசிய பார்வை ஒருமுறை //
இங்கே கவிதை நிற்கிறது உயர்ந்து.
'உதாசினித்து', 'புன்னகையித்து'... புதுத் தமிழ்?
ஒட்டிக்கொள்ளும் புன்னகையும் பூக்களும் எத்தனை ரசிப்பு !
ReplyDeleteஒரு நிஜத்தின் பல நிழல்களென என் கவிதையைத் தொடரும் தங்கள் அனைவரின் அன்பிற்கும் மனம் நிறைந்த நன்றிகள்...
ReplyDeleteசிலிர்ப்பது உணர்வு என்றாலும் அதனை பாத்திரத்தோடு ஒப்புமைப்படுத்தியத்தில் ஒரு நுட்பம் இருக்கிறது . உணர்வின் வெளிப்பாட்டை பாத்திரங்கள் பிரதிபலிக்கின்றன என்பதோடு உலகமெனும் நாடகத்தில் நாமெல்லாம் பாத்திரங்கள்தானே... அந்த புகைப்படம் மிகச்சரியான ஒளியில் மிகச்சரியான கோணத்தில் எடுக்கப்பட்டு இருக்கிறது. ஒருவேளை அந்த புகைப்படம் இந்த கவிதை எழுதவும் தூண்டியிருக்கலாம் ... உங்கள் கவிதை இன்னும் சிலரை தூண்டக்கூடும் வலைபூ வனப்பு...
ReplyDelete