கடவுளரின்
அதியற்புதங்களும் பெருங்கருனைகளும்
என்ற புத்தகத்தை
கடைசியாக கழிவறையிலிருந்தபோது படித்தவள்
சிலநாட்களின் முன்பிருந்து நாப்கின்கள் சுருட்டி வீசுவதற்கு
கிழிக்கத் துவங்கியிருந்தாள்
மிரளச்செய்தல், விரட்டுதல், விரவும் குருதியில் லயித்தல்
பீதி நிறைந்த விழிகளில் ஈக்கள் மொய்க்க சாகடித்தல்...
'பழிவாங்கும் ஆவிகள்'
புத்தகத்தின் எழுத்துக்கள்
சாம்பலில் ஈனமாய் முனகுகின்ற இப்போது
விம்மி இற்று விழுந்துக்கொண்டிருக்கின்றன
சில நிழற்ப்படங்களும்
ஒரு வரை படமும்.
கோப்புக் காட்சிகளை சகிக்கவியலாமல்
திரைக்குள்ளிருந்து ஊர்ந்து கொண்டிருக்கின்றன தீக்கு
யுவதியொருத்தியின் கண்கள்.
No comments:
Post a Comment