திரும்புவதற்க்கு முன்பாக
இன்னொருமுறை பார்க்கிறார்கள்
பேருந்து மறைந்த திசையில்
இன்னும் கொஞ்சநேரம் தேடுகிறார்கள்
ரயிலின் வாசலுக்கு
மீண்டும் வந்து கையசைக்கிறார்கள்
விடைபெறுதல்கள்
விடைபெறுதல்களாகவே இருப்பதில்லை
இதோ
ஒரு சருகு
அண்ணாந்து பார்த்தபடி கிடக்கிறது.
-இயற்கைசிவம்
அண்ணாந்து மரம் பார்த்தபடிக் கிடக்கும் சருகின் படபடப்பு, வரைபடத்தில் இந்தியா பார்த்துப் பரவசப்படும் நொடிக்குள் அம்மா வீடிருக்கும் சந்தினை அடைந்துவிடும் என் மனத்தினுள்ளும்.
ReplyDeleteஅழகான விடைபெறுதல்கள்... அடுத்தச் சந்திப்புவரைத் தொடரும் புளகாங்கிதங்கள்.
தங்களது மேலும் ஒரு பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
ReplyDeletehttp://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_17.html
அன்பு தோழி , மனம் நிறைந்த நன்றிகள் உங்களுக்கு, மேலும் பக்க வடிவமைப்பு நடந்துக்கொண்டிருக்கும் நமது வெயில்நதி இதழுக்கு உங்களின் படைப்புகள் ( siru kathaigal ) கொடுத்து உதவுமாறும் வேண்டுகிறேன், உங்களின் மின்னஞ்சல் முகவரியையும் தருக
ReplyDelete-மிக்க அன்போடு இயற்கைசிவம்
சருகின் விடைபெறல் யாருக்கு உறுத்தப்போகிறது.மரத்தின் வேதனை வெளியில் தெரியாது !
ReplyDelete