Tuesday, 28 August 2012

நிலன்


குளம் விரித்துக் காத்திருக்கிறான்
நதி விரித்துக் காத்திருக்கிறான்
கடல் விரித்துக் காத்திருக்கிறான்
நிலன்
முகம் மூடியிருந்த கேசங்கள் களைய
ததும்புகிறாள்
வழிகிறாள்
பொங்குகிறாள்...
நிலா
இன்றும் அவளின் இன்னொரு பக்கம்
பார்க்க முடியாமலேயே போகிறது
நிலனுக்கு
மேலும்
இது ஒருபோதும் நிகழவேப் போவதில்லை
என்றாலும்
உடைந்த எனது  நிலாச் சில்லுகளை
அவனது குளத்தில் ஒவ்வொன்றாய் வீசியபடி
காத்திருக்கிறேன்    
நானும்.
-இயற்கைசிவம்.

No comments:

Post a Comment