கொஞ்ச தூரம் ஓடி நின்று
வெறிக்கிறது
நெடுஞ்சாலையில் வீசப்பட்ட
காலி புட்டி
அருகில் வந்த குப்பைகள் சேகரிக்கும் ஒருவன்
எஞ்சியிருந்த அதன் ரத்தத்தை
தனது பெருந்தாகத்திற்கு உண்ணக்கொடுக்கிறான்
பின் அதன் உடலை
தன் முதுகிலிருக்கும்
நூற்றுச் சடலங்களுக்கான கல்லறைக்குள் வீசுகிறான்
இப்போது
பிறிதொரு வாழ்வும்
பிறிதொரு மரணமும்
ஆசிர்வதிக்கப்பட்ட காலி புட்டி
தார்ச் சாலையின் இருளோடு
முனுமுனுத்துச் செல்கிறது
இருத்தலின் பாடலை.
-இயற்கைசிவம்
அழகு!
ReplyDelete