கட்டைகளின் மேல் கிடத்துகையில்
அநேகமாய் அனைத்து மலர்களும்
உதிர்ந்துவிட்டிருந்தன.,
நிஜமான ஒரு
கண்ணீர்த் துளியைப்போல
கடைசியான ஒரு
முத்தம் போல
இன்னதெனப் புரியாத குழந்தையின்
ஒரு சிரிப்பைப்போல
குறுக்கே பிடிக்கப்பட்ட துணியில்
தூரயிருந்து வீசுகையில்
கட்டைகளிடையே விழுந்துவிட்ட
ஒரு நாணயம் போல
ஒரு நன்பகலில்
நண்பனது வீட்டிலிருந்து வெளியேறுகையில்
நண்பன் எதிர்படுகையில்
இருக்கும் நண்பனைப்போல
பிரேதத்தின்
இடது காதுமடலின் பின்னால்
ஒட்டியிருந்தது
ஒரு இதழ்.
-இயற்கைசிவம்.
உங்கள் அப்ஸர்வேஷன்.. அப்புறம் ஒவ்வொரு விதமாய் ஒப்பீடுகள்.. வாசித்ததும் கனக்கிறது.. வார்த்தைகளுடன் மனசு.
ReplyDeleteகாதுமடலோரம் ஒட்டியிருக்கும் அவ்வொற்றை இதழை அகற்றுவதற்கு அனிச்சையாய் நீள்கின்றன கைகள். அந்த அளவு என்னைத் தன்னுள் ஈர்த்துவிட்டது இக்கவிதை! பிரமாதம். பாராட்டுகள்!
ReplyDelete