விற்பனை முடிந்தப் பூக்கடையில்
எஞ்சியிருக்கும்
இதழ்களைப்போல இருக்கின்றன
நீயில்லாப் பொழுதுகள்...
கல்லூரி செல்லத்துவங்கிய நாள் முதலே
நாம் அதிகம் பேசிக்கொள்வதில்லை
என்றாலும்
விளக்கணைந்த பின்னால்
உனதறையில் ஒளிராதக் கைப்பேசி
அலாதியாக்கியிருக்கிறது
என் இரவுகளை...
இருக்கையில் சாய்ந்து
நெஞ்சோடு அணைத்துக்கொண்டிருக்கும்
உள்ளீடற்ற
உன் சிறுவயது ஆடையில்
கொஞ்சம் கொஞ்சமாய் நிறைகிறாய்...
இப்போதும்
சிரித்துக்கொண்டிருக்கிறாள்
நிழற்ப்படத்தில்
உன் அம்மா.
-இயற்கைசிவம்
விற்பனை முடிந்தப் பூக்கடையில்
ReplyDeleteஎஞ்சியிருக்கும்
இதழ்களைப்போல இருக்கின்றன
நீயில்லாப் பொழுதுகள்...
முதல் வரியிலேயே ஈர்த்து கடைசி வரை மிதக்கச் செய்து விட்டது கவிதானுபவத்தில்.