முடிவுகளால் வளைக்கப்பட்ட
வீரனைப்போலக் கிடக்கிறேன்...
அரை நூற்றாண்டு இருக்கும்
இன்று
மஞ்சள் பூசப்படும் உன் கன்னங்களை
நானேந்தி
கொஞ்சம் கொஞ்சமாய்
மறைந்துவரும்
உன் முகவரிகளில் பூரிக்கிறது
எப்போதோ நான் கொடுத்த முத்தம்
உன்னை மொய்த்த ஈக்களில்
ஒன்றிரண்டு
நீயின்றி எதிர்கொள்ளவிருக்கும்
காலத்தின் சூட்சுமங்களை
என் சுருக்கங்களில்
புதைத்துசெல்கின்றன
உதாசினப்படும் கண்ணீரின்
அடர்வை
நீயன்றி யாரறியக்கூடும்
இத்தனைக்கூட்டமிருந்தும்
என்னோடுமட்டும் பேசுகிறாய்
விடைத்தரக் கெஞ்சுகிறாய்...
இனியும் நீ
சுமந்துக் களைக்க ஒன்றுமில்லை
உலகில்
மேலும்
நம்மிடையே இருப்பது
இந்தக் கண்ணாடிச்சுவர் மட்டுமல்ல
காலமும்...
போ
தனம்.
-இயற்கைசிவம்
No comments:
Post a Comment