இத்தனை ஆண்டுகளின் பின்
உன் நியாபகங்கள் வந்ததற்கு
எந்த முகாந்திரமும் இல்லை
வாசம் மிகுந்த சோப்பு
விலையுயர்ந்த ஷாம்பூ
முகப்பூச்சு
எத்தனை முறை
என்ற பிரக்ஞையற்று
கலைத்து வாரிய தலை
இஸ்த்ரி போட்ட சட்டை
வெளுத்திருக்காத பேண்ட்
சைக்கிளுக்கு எண்ணெய்
சொத்தையாய் ஒரு நண்பன்
என
நீ சாலையைக் கடக்கும்வரை
குறுக்குச்சந்தில்
காத்திருந்ததைப்போலவே
இருந்தது
இன்றும்.
-இயற்கைசிவம்
என்றும் அழகுதான்..காத்திருத்தலும் கவிதையும் காதலும்.
ReplyDeleteஎந்த முகாந்திரமுமின்றி திடுதிப்பென இப்படித்தான்... சில நினைவுகள்... நினைவலையில் அன்றைய அதே குதூகலக் குதிப்புடன்!
ReplyDeleteவலையமைப்பு நளினமாகிவிட்டது.
நிலாமகளை வழிமொழிகிறேன். இனிப்போ கசப்போ பழம்நினைவுகள் காரணமின்றி ஞாபகத்துக்கு வந்துவிட்டால் கட்டறுத்துக்கொண்டு அந்தக் காலத்துக்கே பயணப்பட்டுவிடுகிறது இந்த பாழாய்ப்போன மனம்.
ReplyDeleteதிரு ரிஷபன், சகோதரி நிலாமகள், தோழி கீதா,
ReplyDeleteகருத்துக்களின் மூலம்
தங்களின் நியாபகக்கடலும்
தலும்பியதாகக் பகிர்ந்தீர்கள்
மகிழ்ச்சி , நன்றி.
//இஸ்த்ரி போட்ட சட்டை
ReplyDeleteவெளுத்திருக்காத பேண்ட்
சைக்கிளுக்கு எண்ணெய்
சொத்தையாய் ஒரு நண்பன்//
அழகு வர்ணனை!