கம்பியில்
சிறிது தூரம் பயணித்து
விழுந்துக்கொண்டிருக்கும்
மழைத்துளியின்
நகர்தலுக்கான தூரமும்
விழுதளுக்கான இடமும்
பிரத்தியேகமற்றவையாய் இருக்கிறது
காற்றில் பறக்கவிடப்பட்ட
ஒரு முத்தம்
என்னைக் கடந்தும்
போய்க்கொண்டிருக்கிறது
அடர்வற்ற முத்தத்தில்
புல்லரித்து பறக்கவிடுகிறான்
அடர்வற்ற
அல்லது
அடர்வற்றுப் போகயிருக்கும்
முத்தத்தை ஒருவன்
மோதித்தெறிக்கும் முத்தங்களில்லாமல்
நிகழ்வதில்லை
அன்றாடங்கள்
காகிதங்கள் பொறுக்கியபடி
மாடியிலிருந்துக் கையசைக்கும்
குழந்தைக்கு
கொடுத்தனுப்பிய முத்தம்
எதேச்சையாய்
பொம்மையின் மீது
பதிந்துவிடுகிறபோதும்
புன்னகைத்து நகர்கிறான்
ஒருவன்
பெருமளவுக் குறைந்துவிடுகிறது
வெளியில்
முத்தங்களின் நெரிசல்.
-இயற்கைசிவம்.
No comments:
Post a Comment