சில்லிடலிலிருந்து மீளும்
சிமென்ட் பெஞ்சிலமர்ந்து
அதிக்களைப் புணர்வின் சுவடுகளை வெறித்தல்
ஒரு சிலந்தியின் வலை பின்னலை,
பிரிந்தக் காதலியின்
முத்தங்களின் நியாபகங்களை இரசித்தல்
எழுந்துச் சென்று வாங்குமுன்
வீசிப்போகும் செய்தித்தாள் சிறுவனை
வசையாமல் விடுதல்
செய்திகளில்
விபத்தில் உருக்குலைந்த ஒருவர்,
கொலையில் குடல் சரிந்த ஒருவரின்
முகங்களை
வேறு சில முகங்களாக மாற்றி லயித்தல்
...............
............................
பின்
ஆடைவிலக்கி
தேநீர் பருகுதல்...
ஒரு ஞாயிற்றுக் கிழமையின் புலர்காலையை
வேறெதனால் தந்துவிட முடியாது.
- இயற்கைசிவம்
No comments:
Post a Comment