Thursday 13 September 2018

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கணேசா


-யியற்கை
பொ. முன் 3ஆம் நூற்றாண்டிலிருந்து பொது. பின் 5 ம் நூற்றாண்டு வரையிலும் கிடைக்கப்பெற்ற எந்தவொரு கல்வெட்டுகள், இலக்கியங்களிலும் தமிழகத்தில் கணேசன் (இப்போது மாப்ள கணேச குமாரன் இருக்கிறார் என்பது நாளைய வரலாறு, அதை விடுவோம்) இருந்ததற்கான குறிப்புகள் இல்லை என்று வரலாறு சொல்கிறதுரிக் வேத காலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிற கணேசன் தொடர்புடைய வார்த்தைகளும் நம்ம விநாயகரைத்தான் குறிப்பிடுவதாக ஆதாரங்கள் இல்லை என்கின்றனர் வரலாற்று ஆய்வரிஞர்கள்.
விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் காணாதிபத்தியம் என்பதாகவும். இந்த காணாதிபத்தியம் பின்பு சைவ சமயத்தோடும், வைணவ சமயத்தோடும் ஒன்றிணைந்ததாகவும் வரலாற்று ஆய்வுச் செய்திகள் எழுதப்பட்டிருக்கின்றனசமஸ்கிருதத்தில் கணா என்கிற வார்த்தை கூட்டம், குழு, தொகுப்பு என்றும் இஷா என்கிற வார்த்தை தலைவன் என்றும் பொருள் படும் என்கின்றனர். ஆக இந்த இரு சொற்களின் கலவைதான கணேஷா அதாவது கூட்டத்தின் தலைவன்
என்றால், நாகரீக வளர்ச்சிக்கு முன் நாடு, தேசம் என்கிற எல்லைகளற்று நாடோடிக் கூட்டங்களாக வாழ்ந்திருந்த அப்போதைய மனிதர்கள் (கற்கால மனிதர்கள்) தங்கள் குழுவில் வலிமை பொருந்திய ஒருவரை தலைவனாக தெரிவு செய்வது அவர்களின் கலாச்சார வழக்கமாக இருந்திருக்கிறதுஇங்கு வலிமை என்பது தனதுக் குழுவை வழிநடத்துதல், இன்னொருக் குழுவைக் கட்டுப்படுத்துதல் அல்லது வெற்றிபெறுதல் மற்றும் பெரிய அபாயங்களை எதிர்கொள்ளுதல் அல்லது வீழ்த்துதல் என்கிற அடிப்படையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இங்கே யுகங்களை இன்னும் கொஞ்சம் பின்னோக்கிச் சென்று பார்த்து, பாலூட்டிகளின் துவக்கக் காலத்தின் யானைகளின் தகவமைப்பு என்பது அப்பொதைய பனி யுகத்திற்கு ஏற்ப குளிர் தாங்க அதிக கொழுப்பு நிறைந்த பிரம்மாண்டமான உருவத்துடனும் அடர்த்தியான ரோமங்களுடனும் இருந்துள்ளதை நினைவில் கொண்டுவருவது பொருத்தமாக இருக்கும்.
அப்படிப்பட்ட பிரம்மாணடமான யானைகளுடன் நமது பூட்டனுக்கு பூட்டனுக்கு பூட்டனுக்குப்... பூட்டன் போராடியோ அல்லது வேட்டையாடியோ வாழ்ந்திருப்பார். சக்திக்கு மீறிய பிரம்மாண்டமான ஆற்றலை வீழ்த்திய பேறாற்றல் கொண்ட ஒருவரைக் கூட்டத்தினர் தங்கள் தலைவராகப் போற்றினர். அந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக யானையின் தலையினை வெட்டி உள்ளீடற்ற தலையினை முடியாக அணிந்து கொண்டபோது, (இப்போதும் கூட நமது ஹாலிவுட் வரலாற்றுப் படங்களில் நாயகன்கள் இப்படி ஏதேனும் விலங்குகளின் தலைகளை அணிந்துகொண்டிருக்கும் காட்சிகளைக் காணலாம்அதனை அப்போதைய புலவர் (சித்திர எழுத்துக்காரர்தான்) ஆயிரம் யானைக் கொன்றால் பரணி என்கிற நமது கலிங்கத்துப் பரணியைப் போல சித்திரங்களில் எழுதியிருப்பார்.
அந்தச் சித்திர வரலாற்றுக் காவியம் யுகங்கள் கடந்து அவ்வப்போதைய புலவர்களுக்கு (இப்போது புலவர் என்பது, தமிழ் பிராமி, பாலி, பிராகிருதி, வேத மொழிகள் என்று மொழிகளைத் தெரிந்தவர்களாகப் புரிந்துகொள்ள வேண்டும்) அல்லது வரலாற்று அறிஞர்களுக்குக் கைகள் மாறி அந்தச் சித்திரங்களுக்கு அவரவர் ஆய்வுத்திறன் அனுமானங்களுக்கேற்ற கதைகளை, விளக்கங்களை அளித்து ஒருவழியாகக் கணங்களின் தலைவன் கணேசன் நமக்கு வந்து சேர்ந்தார் எனவும் புரிந்துகொள்ளலாம். இவற்றில் இவரது தோற்றம், நாள், நட்சத்திரம் ஆகியவையும் அடங்கும்.
இந்த இடத்தில் பொதுவாக வரலாற்றுக் காலம் வரலாற்றுக்கு முந்தையக் காலம்  என வரலாற்றுப் பேரறிஞர்கள் வரையறுப்பதை, எழுதப்பட்டக் காலத்தை வரலாற்றுக் காலம் எனவும்  அதற்கு முந்தையக் காலத்தை பொதுவில் வரலாற்றுக்கு முந்தையக் காலம் எனவும் புரிந்துகொள்வதை மறு பரிசிலனை செய்யவேண்டும் எனத் தோன்றுகிறது. எழுதப்பட்ட வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய சித்திர எழுத்துக்களும் நமக்கு உணர்த்துவது அச்சித்திரங்கள் சார்ந்த வரலாற்றுக் காலத்தைத் தானே? எனில் எழுத்துக்களே இல்லாத நிலையில் வரையறைகளே இல்லாத வாழ்வுச் சூழலை, யுகங்கள் கடந்து வரப்போகிற சந்ததியினர் தந்து ஆதியைத் தெரிந்துகொள்ளட்டும் என?! அதிலும் பாறைகளில் சித்திரங்களாகக் கிறுக்க முனைந்தனரே முன்னோர், அவர்களும் ஹெரோடோட்டஸை விடவும் போற்றுதற்குறிய வரலாற்றுத் தந்தைகள் தானே.
எனவே வரலாற்றுக் காலங்களை விரிவாக எனில்எலும்புச் சுவடுகள் காலம், கற்கருவிகளின் காலம், சித்திர வரலாற்றுக் காலம், எழுத்து வரலாற்றுக் காலம் எனவும் குறிப்புகளை வைத்து மட்டுமே எனில் சித்திர வரலாற்றுக் காலம், எழுத்து வரலாற்றுக் காலம் எனவுமே புரிந்துகொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன். ஏனெனில் நாம் எங்கிருந்துப் புரிந்துகொள்கிறோமோ அங்கிருந்தே வரலாறு ஆரம்பித்துவிடுகிறது.
எது எப்படியோ ஆதியிலிருந்தே நாம் ஒரு நல்ல ஆற்றல் மிக்கவனை, நல்ல வழிகாட்டியை, நிர்வகிக்கும் கூர்ந்த புத்தியுள்ளவனை, சமூகத்திற்கு பொறுப்பேற்பவனைத்தான் தலைவனாகக் கொண்டு போற்றி வந்துள்ளோம் அந்த வகையில் நமது ஆதித் தலைவனாக இருந்திருக்கக் கூடிய கணங்களின் தலைவன் கணசனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


No comments:

Post a Comment